வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்போம்- ஸ்ரீ ல.சு.க.


83183_dayasiri-jayasekara--new

இந்த வரவு-செலவுத் திட்டத்தைத் தோற்கடிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் உறுதியாக இருப்பதாகவும், ஏனைய கட்சிகளுடனும் சேர்ந்து இதனைத் தோற்கடிக்க ஸ்ரீ ல.சு. கட்சி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும்  அக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இது தேர்தலை இலக்கு வைத்து தயாரிக்கப்பட்டுள்ள வரவு- செலவு திட்டம் எனவும் அவர் மேலும் கூறினார்.

தேர்தலுக்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர கட்டியெழுப்பியுள்ள மாபெரும் கனவுக் கோட்டையை நனவாக்குவது யதார்த்தமல்லவென்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.   (மு)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>