தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவியின் சடலம் மீட்பு


Photo (4)

பொகவந்தலாவ டின்சின் தோட்ட பகுதியில் உள்ள தொழிற்சாலை கொலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு வெளி பகுதியில் கால்கள் இரண்டும் கட்டபட்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்

மேற்படி மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்ட அவரின் சகோதரி கூச்சலிட்டதையடுத்து பொகவந்தலாவ பொலிஸாருக்கு அறிவிக்கபட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொகவந்தலாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவி பொகவந்தலாவ டின்சின் தமிழ் மகா வித்தியாலத்தில் உயர் தரத்தில் கலை பிரிவில் கல்வி கற்ற 18 வயதுடைய முத்துமணி பிரியவர்ஸினி என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மாணவியின் குறித்த மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதோடு, சம்பவ இடத்திற்க்கு கைரேகை பிரிவினர் மற்றும் ஹட்டன் நீதிமன்ற நீதவான் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது. (கி|ஸ)

Photo (3) Photo (4) Photo (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>