ஸ்ரீ ல.சு.கட்சி மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லை- S.B. விளக்கம்


z_p01-SLFP-Convention

எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டியில் நடைபெற்ற பொறுத்தது போதும் பொதுக் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் கலந்துகொள்ளாமைக்கு, பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு காரணம் என பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமாகிய எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

கூட்டணி அமைப்பது தொடர்பில் தீர்மானம் ஒன்றுக்கு வரும் வரையில் பொதுஜன பெரமுனவின் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லையென கட்சி தீர்மானித்தது. இதனாலேயே நாம் கலந்துகொள்ளவில்லை.

தனக்கு நேற்றைய கூட்டத்தில் உரையொன்றுக்கான நேரமும் ஒதுக்கப்பட்டிருந்தது. கட்சியின் தீர்மானம் என்பதனால் அதில் கலந்துகொள்ளவில்லையெனவும் அவர் மேலும் கூறினார்.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>