மத்திய வங்கி ஊழல் மோசடியை நிறுத்தியது இந்த அரசாங்கம்- அஜித் மான்னப்பெரும


images

மத்திய வங்கியில் இடம்பெற்று வந்த மோசடியை நிறுத்தியது இந்த அரசாங்கமே எனவும், இருப்பினும், சகலரினதும் ஏச்சுப் பேச்சுக்களுக்கு உள்ளாவது இந்த அரசாங்கமே ஆகும் எனவும் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.

வரவு செலவுத்திட்ட இரண்டாம் கட்ட விவாதத்தில் இணைந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

கடந்த அரசாங்கத்தில் மத்திய வங்கியில் ஊழல் மோசடி இடம்பெற்று வந்துள்ளது என்பதை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2008 ஆம் ஆண்டு முதல் இந்த மோசடி இடம்பெற்று வந்துள்ளதை அந்த அறிக்கைகள் கூறுகின்றன.

இருப்பினும், கண்டுபிடித்துக் கொள்ள முடியாதவாறுதான் அந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஊழல்வாதிகள் விசாரணை நடாத்த முடியாதவாறு சட்டத்திலுள்ள ஓட்டைகளில் நுழைந்து மறைந்துவிடுகின்றனர்.

எமது அரசாங்கத்திலும் மத்திய வங்கியில் மோசடி இடம்பெற்றதுதான். அதனை நாம் நிறுத்தினோம். அதன்பிறகு 2016, 2017 இலோ, 2018 இலோ எந்தவித மோசடியும் இடம்பெறவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.   (மு)

 

One comment

  1. அறிவுசார் அமைச்சர்கள் அளவுக்கு அதிகமாகவே ரணில் அரசின் அமைச்சரவையில்.

    என்னசெய்ய இதுதான் மக்கள்நம் தலையெழுத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>