மெக்சிகோ இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு, 15 பேர் பலி


gun-shooting(8)

மெக்சிகோ இரவு விடுதி ஒன்றில் நேற்றிரவு (09) மர்ம குழுவொன்று நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மெக்சிகோவின் குவானாஜூவாடோ மாகாணம், சலாம்கா பகுதியில் உள்ள இரவு விடுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  சராமாரியாக அவர்கள் சுட்டதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவ இடத்துக்கு பொலிஸார் வருவதற்குள் அந்த கும்பல் தப்பி ஓடியுள்ளதாகவும், பெட்ரோல் திருட வந்த கும்பல் ஒன்றே இந்த பயங்கர சம்பவத்தை நடத்தியிருப்பதாகவும்  ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>