இராணுவ தொப்பி அணிந்து இந்திய அணி களத்தில்: நடவடிக்கை எடுக்கவும்- பாகிஸ்தான்


uyt

இராணுவ வீரர்களின் தொப்பி அணிந்து விளையாடிதன் மூலம் ஜென்டில்மேன் விளையாட்டை  அரசியலாக்கிவிட்ட இந்தியா அணியை ஐ.சி.சி. நிறுவனம் கண்டிக்க வேண்டும் என பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா அணி இப்படி தொடர்ந்து இராணுவ தொப்பி அணிந்து விளையாடினால் ‘காஷ்மீர் பிரச்சினையை உணர்த்தும் வகையில், பாகிஸ்தான் வீரர்கள் உலகக் கிண்ணப் போட்டியில் கறுப்புப் பட்டி அணிந்து கொண்டு விளையாட வேண்டியிருக்கும் எனவும் பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

புல்வாமாவில் நடைப்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 40  இந்திய இராணுவ வீரர்கள்  கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்காக உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியிலிருந்து பாகிஸ்தானை விலக்க வேண்டும் என கோரிக்கையை இந்தியா முன்வைத்திருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது என ஐ.சி.சி. சூடான பதிலை இந்தியாவுக்கு அண்மையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்தியா – ஆவுஸ்திரேலியா இடையே ராஞ்சியில் நேற்று முன்தினம் 3வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இராணுவத்தினர் அணியும் தொப்பியை அணிந்து இந்திய வீரர்கள் விளையாடியுள்ளனர். இதற்கே பாகிஸ்தான் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.   (மு)

10 comments

  1. India team out from icc

  2. Wait for anther cup Pakistan will kill u r more army so wait and see

  3. Indian team animals

  4. Indian team animals

  5. இந்திய தற்போதைய அரசு இந்தியாவில் சுயாதீனமாக இயங்கும் அனைத்தையும் அரசியலாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>