அரசாங்கம் கொண்டுவரவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஆபத்தானது – மஹிந்த ராஜபக்ஷ


mahindaaa

எந்தவொரு அரசியல் கட்சியும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு ஆதரவு வழங்கக் கூடாது என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மாத்தறையில் இன்று (10) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமொன்றை நாட்டில் அவசரகாலச் சட்டம் இருக்கின்ற போதே பயன்படுத்த முடியும். இவ்வாறிருக்கையில், இச்சட்டத்தை சாதாரண சட்ட அந்தஸ்துக்கு மாற்றுவது ஆபத்தானது.

இவ்வாறு மாற்றும் சந்தர்ப்பத்தில், நான் இப்போது கலந்துகொண்டுள்ள இது போன்ற சாதாரண கூட்டமொன்றைக் கூட நடாத்த விடாமல் தடை செய்வதற்கு ஒரு சாதாரண பொலிஸ் அதிகாரிக்கு முடியுமாகின்றது.

இதனால், இச்சட்டத்தை அங்கீகரிப்பதானது ஜனநாயகத்துக்கு எதிரானது என்பது மட்டுமல்ல, அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளுக்கும் ஆபத்தானது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

1979 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினால் மாற்றீடு செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த எதிர்ப்புச் சட்டத்தின் பாதிப்பு குறித்தே எதிர்க் கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>