எத்தியோப்பிய விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழப்பு


eee

எத்தியோப்பியாவில் நேற்று இடம்பெற்ற விமான விபத்தில் அவ்விமானத்தில் சென்ற விமானிகள் உட்பட சகல பயணிகளும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் நைரோபி சென்ற விமானம் ஒன்று  நேற்றுக் காலை உடைந்து வீழ்ந்துள்ளது.

எத்தியோப்பியன் எர்லைன்ஸ் போயிங் 737 ஜெட் விமானம்  எத்தியோப்பிய நகரிலிருந்து உள்ளுர் நேரப்படி காலை 08.38க்கு புறப்பட்ட சிறிது நேரத்தில் 08.44 அளவில் விபத்துக்குள்ளானதாக எத்தியோப்பிய விமான சேவை பணியகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விமானத்தில் 149 பயணிகள் உட்பட 157 பேருடன் பயணித்துள்ளனர். இவர்களில் 33 நாடுகளை சேர்ந்தவர்கள் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>