பால்மாவிற்கும் விலைசூத்திரம் – அமைச்சரவை அங்கீகாரம்


Unskimmed-Milk-powder

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கு விலை சூத்திரமொன்றை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைக்கான பொருத்தமான தீர்வை காணும் நோக்கில் நியமிக்கப்பட்ட குழுவினால் சர்வதேச சந்தையில் நிலவும் விலை மற்றும் கடைபிடித்தல் விதிகளை கவனத்தில் கொண்டு நுகர்வோருக்கும் அரசாங்கத்துக்கும் பால்மா தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பெறுபேறு கிடைக்கும் வகையில் இறக்குமதி பால்மாவிற்கு விலை சூத்திரமொன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை சூத்திரத்தை நுகர்வோர் அதிகார சபை மூலம் நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசன மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் பி.ஹெரிசன் அவர்கள் சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.(அ)

6 comments

  1. குடிக்க உகந்ததா இல்லையா என்பதை நிர்ணயம் செய்த பின்னர் வரியை, விலையை அதிகரித்து அரசியல் ஆட்டம் பன்னலாம்.

  2. குடிக்க உகந்ததா இல்லையா என்பதை நிர்ணயம் செய்த பின்னர் வரியை, விலையை அதிகரித்து அரசியல் ஆட்டம் பன்னலாம்.

  3. Mohamed Irfan Mohideen Hassen
  4. Mohamed Irfan Mohideen Hassen
  5. Don’t buy all chemical and bad fat added

  6. போறபோக்கில சம்பளத்திற்கும் சூத்திரம் வருமோ?.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>