மதூஷைக் கைது செய்ய வேண்டாம்- சிற்றன்னை உயர் நீதிமன்றில் மனு


image_515e6e1e68

இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கும் இடையில் கைதிகளை பரிமாறிக் கொள்வதற்கான சட்டம் நடைமுறையில் காணப்படாமையினால் மாகந்துரே மதூஷ்ஷை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராஜ்ஜியத்தில் வைத்து விசேட அதிரடிப்படை மற்றும் புலனாய்வுத் துறை என்பவற்றினால் கைது செய்வதைத் தடுக்கும் வகையில் இடைக்காலத் தடை உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி மாகந்துரே மதூஷின் தாயின் சகோதரியினால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சூரியவெவ ஹத்போருவவில் வசிக்கும் அபேசேகர விஜேசேகர ஸ்ரீயானி என்பவரினாலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக விசேட அதிரடிப்படை கட்டளையிடும் அதிகாரியும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான லதீப் உட்பட ஐவர் பெயரிடப்பட்டுள்ளனர்.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>