நியுசிலாந்து தாக்குதல்: சந்தேகநபரை ஏப்றல் வரை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவு


image_35b3207843

நியுஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் நகரில் பள்ளிவாயல்களில் புகுந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு 49 பேரை பலியெடுத்த சந்தேகநபரை எதிர்வரும் ஏப்றல் மாதம் 5 ஆம் திகதி வரையில் தடுப்புக் காவலில் வைக்குமாறு நியுஸிலாந்து நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.

கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள அவுஸ்திரேலியரான பிரென்டன்  (28 வயது)   இன்று (சனிக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இவர் மீது ஏனைய குற்றச்சாட்டுகள் விரைவில் பதிவு செய்யப்படும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலில் இரண்டு மற்றும் 13 வயதான இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் 48 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சந்தேகநபர் துப்பாக்கி உத்தரவாதப் பத்திரத்தை முன்னரே பெற்றிருந்தார் எனவும்,  கைதுசெய்யப்பட்டபோது அவர் ஐந்து துப்பாக்கிகளை வைத்திருந்ததாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.   (மு)

One comment

  1. இதையே தான் 1990 களில் இலங்கை காத்தான்குடியில் இந்து புலி பயங்காரவாதிகள் செய்தனர்
    இன்று கிறிஸ்தவ பயங்கரவாதி செய்து விட்டான்
    ஏங்களுக்கு சோதனைகள் ஒன்றும் புதிதல்ல
    எங்கிருந்து வந்தோமோ அங்கே (அல்லாஹ்விடம்) செல்வதற்கு எப்போதும் தயார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>