இந்தோனேசியாவில் வெள்ளம் – சுமார் 60 பேர் பலி


55

இந்தோனேசியாவின் பபுவா (Papua) மாகாணத்தின், ஜெயபுரா (Jayapura) மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 60 பேரளவில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் சுமார் 70 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் காரணமாக குறித்த பகுதியில் உள்ள பல வீடுகள் சேதடைந்துள்ளதுடன், அங்கிருந்த பலர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது மழை குறைவடைந்துள்ளமை காரணத்தினால், மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.மேலும் பலர் காணாமல் போயுள்ளதினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் மீட்பு பணியாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.(ஸ)

5 comments

  1. Ashri Meno Ashri Meno

    Innalilahi Vainna Ilaihi Rajihoon

  2. A ameen yarabbal aalameen

  3. Hamsadeen Abdul Azeez

    innalillahi wahinna ilaihi rajioon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>