ஐ.பி.எல். போட்டிகள் இன்று மாலை ஆரம்பம்


300px-DLF_IPL_Logo.svg

இந்தியன் பிரீமியர் லீக் 12 ஆவது ரி.20 கிரிக்கெட்  போட்டித் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (23) மாலை ஆரம்பமாகின்றது.

இந்தியாவிலுள்ள எட்டு கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவுள்ள இப் போட்டித் தொடரில் மொத்தமாக 60 போட்டிகள் இடம்பெறவுள்ளன. இன்று  ஆரம்பமாகும் போட்டிகள் எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியுடன், விராத் கோஹ்லி தலைமையிலான ஆர்சிபி அணி மோதுகிறது.

இம்முறை ஐ.பி.எல். தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ஷிரியாஸ் ஐயர் தல‍ைமையிலான டெல்லி கெப்டல்ஸ், அஸ்வீன் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப், தினேஸ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ், விராத் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபத் ஆகிய எட்டு அணிகள் களமிறங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.   (மு)

 

One comment

  1. IPL இலங்கையிலா.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>