ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்ப பாகிஸ்தானில் தடை


pakistan

இந்தியன் பிரீமியர் லீக் ரி.20 கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து பாகிஸ்தானின் ஊடகத்துறை  அமைச்சர் ஃபவத் அகமது சவுத்ரி கருத்துத் தெரிவிக்கையில்,

‘‘இந்த முடிவுக்கு இந்தியாவின் நடவடிக்கைகள்தான் காரணம். இராணுவ தொப்பி அணிந்து விளையாடி இந்தியா விளையாட்டை அரசியலாக்கிவிட்டது. இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறது.

அத்துடன்,  பாகிஸ்தானின் உள்ளூர் போட்டியான பிஎஸ்எல் ரி.20 கிரிக்கெட் போட்டிகளை  இந்தியா ஒளிபரப்பவில்லை. இந்திய அரசும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கைகளும்தான் ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்ப தடை விதிக்க காரணமாகியது” எனவும் பவாத் அகமது சவுத்ரி மேலும் கூறியுள்ளார்.

புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் இந்திய கிரிக்கெட்டிலும் எதிரொலித்திருந்தது.  அதனால் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தானுடன்  விளையாடக் கூடாது என்ற கோரிக்கை இந்தியாவில் எழுந்திருந்தது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடமும் (ஐசிசி) இந்தியா இது தொடர்பில் முறைப்பாடு செய்திருந்தது. இருப்பினும், இந்தியாவின் கோரிக்கைக்கு ஐ.சி.சி. மறுப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>