ஊடகத்துறைக் கற்கைநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு


578378e6-e56b-4374-8392-699492ceb56e

ஒரு வருட ஊடகவியல் துறை கற்றைநெறியைப் பூர்த்தி செய்த 20 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்று  (24 ) கண்டி ”மகாவலி ரிஷ்” (Mahaveli Reach) ஹோட்டலில் நடைபெற்றது.

“நிவ்ஸ் விவ்” (Newsveiw) ஊடக வலையமைப்பின் தலைவர் இர்பான் காதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் தலைவர் பேராசிரியர் விஜேசந்திரன் கலந்து சிறப்பித்தார்.

விஷேட அதிதியாக பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல் மற்றும் உளவியல் துறையின் தலைவர் பேராசிரியர் அனஸ்  கலந்து கொண்டார்.

“றொய்டர்” ROUTERS ஷிஹார் அனீஸ், லண்டன் BBC தமிழோசை சீவகன் பூபாலரத்னம், விடிவெள்ளி பத்திரிகை ஆசிரியர் பைரோஸ், “டெய்லி பிரர்” பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் ஆலோசரகர் அய்யூப், பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு   உறுப்பினர் ஹுசைன் ஆகியோர் இப்பட்டக் கற்கை நெறிக்கு வழங்கிய பங்களிப்பைப் பாராட்டி நினைவுச் சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

பயிற்சிபெற்று வெளியேறியவர்கள் இத்துறையில் தொடர்ந்து பங்களிப்புச் செய்யவும் பிராந்தியத்தின் மக்கள் தேவைகளை பேசுவதற்கான ஓர் ஊடகமாகவும் kandytimes.lk என்ற பெயரில் தனித்துவமான இணையத்தளம் ஒன்றும் நேற்று ஆரம்பித்துத்து வைக்கப்பட்டது.

அமெரிக்க தூதரகத்தின் பூரண அனுசரணையில் நடாத்தப்பட்ட  இக்கற்கைநெறியை அக்குரணை “நிவ்ஸ் விவ்” பத்திரிகை பூரண ஒருங்கிணைப்பு, மேற்பார்வை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. (மு)

படமும் தகவலும் – A Raheem Akbar
மடவளை பஸார்

0dec2de2-7253-40a5-bd69-e117fae4ee42 3af2938a-3368-46be-a92f-7c53eec751b3 3d70981a-ffb7-4861-833f-17ae3dcdc952 76ad627c-0bf6-40f3-a6e0-4661dd2f1385 578378e6-e56b-4374-8392-699492ceb56e

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>