ஆசிரியர் அடிப்பதை பெற்றோர் தூக்கிப் பிடிப்பது ஆபத்தானது- ஜனாதிபதி


maith1

அக்காலத்தில் ஆசிரியர்கள் அடித்ததனால் தான் பாடசாலைகளில்  ஒழுக்கம் கட்டியெழுப்பப்பட்டது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாம் கல்வி கற்கும் காலத்தில் பாடசாலையில் ஆசிரியர்களிடம் அடிவாங்கிக் கொண்டு வீட்டுக்குச் சென்றால், எமது பெற்றோரும் மேலதிகமாக எமக்கு அடிப்பார்கள். எமது கால்கள் வீங்கிப் போகும். அப்போது நாம் பொறுமையாக இருப்போம்.

நிச்சயமாக ஆசிரியர் அடித்திருந்தால், தமது பிள்ளை ஏதாவது தவறு செய்திருப்பார் என்பதை பெற்றோர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.

ஆனால், இன்றுள்ள பெற்றோர்கள் தமது பிள்ளைக்கு ஆசிரியர் ஒருவர் ஒரு சிறிய அடி கொடுத்தாலும் கூட, பொலிஸுக்கு தொடர்பு கொள்ளும் நிலைமையும், மனித உரிமைகள் அமைப்புக்களை நாடும் நிலைமையும் தான் காணப்படுகின்றது. இது பிள்ளைகளின் ஒழுக்கத்தைக் கட்டியெழுப்புவதில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆசிரியர் ஒருவர் மாணவருக்கு அடிப்பது அவரின் மீதுள்ள கோபத்தினால் அல்ல. அவரை நல்வழிப்படுத்துவதற்கே ஆகும். இன்று மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் என புதிய சட்டங்கள் உருவாகியுள்ளன. இவற்றை பெற்றோர்கள் நாட ஆரம்பித்தால் மாணவர்களை ஆசிரியர்கள் நல்வழிப்படுத்துவது பிரச்சினைக்குரியதாக மாறும்.

மிகவும் அரிதான சந்தர்ப்பத்தில் ஆசிரியர் ஒருவர் ஒரு பிள்ளைக்கு எல்லையை மீறி தண்டிக்கும் சந்தர்ப்பங்கள் உருவாகும். அவ்வாறு செய்வது உண்மையில் தவறு எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

நேற்று பொலன்னறுவையிலுள்ள பாடசாலைக் கட்டிடமொன்றைத் திறந்து வைத்து உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.   (மு)

 

 

One comment

  1. What about. Menning of human rights all mental

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>