அக்கரைப்பற்று மன்பஉல் கைராத் மகளிர் கல்லூரிக்கு புதிய மாணவர் அனுமதி


interview

ஆழமான அறிவும், ஆன்மீக பண்புகளும் கொண்ட பெண் ஆளுமைகளை உருவாக்கும் இலட்சியப் பணியில் ஈடுபட்டுள்ள அக்கரைப்பற்று மன்பஉல் கைராத் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இக்கலாசாலையில் கல்வி கற்க விரும்பும் மாணவிகள் தமது விண்ணப்பங்களை எதிர்வரும் 10.04.2019 இற்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும் என அந்த நிறுவனத்தில் அதிபர் உஸ்தாத் இர்ஸாத் இஸ்லாஹி டெய்லி சிலோனுக்கு அறிவித்தார்.

5 வருட ஷரீஆ கற்கைநெறிகள் முழு நேரமாக போதிக்கப்படும் இக்கலாசாலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இவ்வாறு கலாசாலையில் கல்வி கற்க அனுமதி பெறும் மாணவிகள், க.பொ.த  உயர் தர பரீட்சை மற்றும் அரச பரீட்சைகளில் தோற்றுவதற்கான தயார்படுத்தப்படுவார்கள்.

அத்துடன், Dip. in IT, English & Nursary training , Certificate in Counselling, Psychology, HRM & Comparative Religion, 25 Special soft skills development Programmes மற்றும் உயர் கல்வி வழிகாட்டல் மற்றும் சர்வதேச வெளிநாட்டு பல்கலைக்கழக அனுமதிக்கான வழிகாட்டல்கள் என்பன போதிக்கப்படவுள்ளன.

பிரபல்யமான, துறைசார் அனுபவமிக்க வளவாளர்களின் வழிநடாத்தலில், அமைதியான, ஆரோக்கியமான, பாதுகாப்புடன் கூடிய இஸ்லாமிய சூழலில், 5 வருடத்திற்கும் மேலாக மாணவர்களை வெற்றிப்பாதையில் வழிகாட்டி வெற்றி கண்ட அனுபவம் இக்கலாசாலைக்கு காணப்படுகின்றது.

எழுத்து மற்றும் நேர்முகப் பரீட்சை என்பவற்றினுாடாக நாடெங்கிலும் இருந்து 45 மாணவிகள் இம்முறை அனுமதிக்கப்படவுள்ளதாகவும் அதிபர் தெரிவித்தார்.

மேலதிக தகவல்களை 0777 37 99 12  அல்லது 067 22 79590 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அதிபர் உஸ்தாத் இர்ஸாத் இஸ்லாஹி மேலும் குறிப்பிட்டார்.   (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>