நாட்டு மக்களை மொழி ரீதியில் பிரித்தவர்கள் அரசியல்வாதிகளே- ஜனாதிபதி


maithripala sirisena president of sri lanka

சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் அன்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒரே அணியில் இருந்து போராடியதனால்தான், இந்நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கப் பெற்றது எனவும், நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் தங்களின் தேவையின் நிமித்தம் ஓரணியில் இருந்த இந்நாட்டு மக்களைப் பிரித்ததனால் இனங்களுக்கிடையில் எதிர்ப்பும், குரோதமும் வளர்ந்துள்ளது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

புனித குர்ஆனின் சிங்களப் பிரதிகளை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த நாட்டில் மொழி ரீதியில் மக்களைப் பிரித்தவர்கள் அரசியல்வாதிகளே. இந்தக் குற்றச்சாட்டை நான் அவர்கள் மீதே விடுக்கின்றேன். மொழி ரீதியில் பாடசாலைகள் பிரிவதற்கு காரணமாகியவர்கள் அரசியல்வாதிகளே ஆகும் எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.  (மு)

 

 

4 comments

  1. Naattilum mattum alla ore matham saarntavarkalaium pirithtu vittarhal

  2. 1973 ல் அப்போதைய ஜனாதிபதி ஜயவர்தனாவே காரணம்.

  3. 1973 ல் அப்போதைய ஜனாதிபதி ஜயவர்தனாவே காரணம்.

  4. எனக்கு தெரிந்து மைத்திரி ஜனதிபதியாகி இதுவரைக்கும் சொன்ன ஒரே ஒரு உண்மை இதுவாகத்தான் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>