கோட்டாபய மீதுள்ள பயமே இவ்வாறு அமெரிக்காவில் மனு தாக்கல் செய்ய காரணம்- ரோஹித


ROHITHA-1

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஸ வரும் என அரசாங்கம் கொண்டுள்ள பயமே அமெரிக்காவில் இவ்வாறு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான காரணமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஸ மீது அமெரிக்க நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள மனு குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

லசந்த விக்ரமதுங்கவின் மகள் இலங்கையிலுள்ள எந்தவொரு நீதிமன்றத்திலும் கோட்டாப ராஜபக்ஸவுக்கு எதிராக எந்தவொரு மனுவையும் தாக்கல் செய்திருக்க வில்லை. இந்த நாட்டில் தாக்கல் செய்யாத மனுவை அவர் ஏன்? அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இது அரசாங்கத்தின் சதியே ஆகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.  (மு)

2 comments

  1. No payam he is an American how can he contest in srilanka

  2. Raththaran kadapu hora

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>