நாட்டுக்குத் தேவையான 30 வருட தேசிய பௌதீக வள அபிவிருத்தித் திட்டம் தயார்- அமைச்சர் சம்பிக்க


Minister_Patali_Champika_Ranawaka1

நாட்டுக்கு அடுத்த 30 வருடங்களில் தேவையாகும் தேசிய பௌதீக வள அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இன்று (09) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

நாம் தற்பொழுது இலங்கைக்கு 2050 வரையில் தேவைப்படும் பௌதீக திட்டத்தை அமைத்துள்ளோம். அடுத்த 30 வருடங்களில் எந்த இடங்களில் அதிவேக பாதைகள் அமைக்கப்படவுள்ளன என்பதையும், மின் உற்பத்தி நிலையங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், தொழிற்சாலைகள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் என்பன எங்கெங்கு அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் திட்டமிட்டுள்ளோம்.

தற்பொழுது நாட்டில் நடைபெறும் அத்தனை அபிவிருத்தித் திட்டங்களுக்கும் மஹிந்த, கோட்டாபய, பசில் ஆகியோர் உரிமை கோரி வருகின்றனர். இருப்பினும், இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் விடயங்கள் எமது தேசிய பௌதீக திட்டத்தில் உள்ளவையே ஆகும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.  (மு)

 

 

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>