மாகாண சபை முறைமை நீக்கப்பட வேண்டும்- ஓமல்பே சோபித்த தேரர்


Omalpe-Sobitha

மாகாண சபைகளின் மூலம் நாட்டுக்கு எந்தவித நன்மையும் இல்லையென ஜாதிக ஹெல உறுமயவின் சிரேஸ்ட உறுப்பினர் கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.

அம்பிலிப்பிட்டியவில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டிலுள்ள மாகாண சபைகளில் 450 உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்படுகின்றனர். இவர்களுக்கான கொடுப்பனவுக்காக ஒரு வருடத்துக்கு 225 கோடி ரூபாவை அரசாங்கம் ஒதுக்குகின்றது. மேலதிக செலவுகளுக்கென ஒதுக்கப்படும் தொகையுடன் சேர்ந்து ஒரு வருடத்துக்கு சுமார் 500 கோடி ரூபாவை இவர்களுக்காக அரசாங்கம் செலவு செய்கின்றது.

இருப்பினும், இவர்களினால் நாட்டுக்கும், மக்களுக்கும் கிடைக்கப் போகும் பயன் மிகவும் குறைவாகவே காணப்படுவதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>