முதல் முறையாக வெளியானது “கருந்துளை” யின் புகைப்படம்


Screen Shot 2019-04-11 at 11.25.54 AM

உலக விஞ்ஞானிகள் இணைந்து உற்சாகமும் குதூகலிப்புடன் உலகின் ஐந்து இடங்களில் ஒரே நேரத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்த்தி 26,000 ஒளியாண்டு தொலைவில் உள்ள சஜிடேரியஸ்A* மற்றும் 6 கோடி ஒளியாண்டு தொலைவில் உள்ள M87எனும் கேலக்சியின் மீ ராட்சச கருந்துளை ஆகியவற்றைப் புகைப்படம் எடுத்து சாதனை படைத்துள்ளோம் என அறிவித்துள்ளனர். இதுவே கருந்துளைகளின் முதல் புகைப்படம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உலகிலிருந்து 500 மில்லியனுக்கும் கிலோமீற்றர்களுக்கு அப்பால் இந்த கருந்துளை இருக்கிறது. இதன் சுற்றளவு 40 பில்லியன் கிலோமீற்றர்களாகும். அதாவது உலகத்தை விட 3 மில்லியன் மடங்குகள் பெரியது. பூமியில் உள்ள 7 தொலைகாட்டிகளின் வழியமைப்பின் ஊடாக இந்த கருந்துளை விண்ணாய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Screen Shot 2019-04-11 at 11.25.54 AMகருந்துளை (Black Hole) என்றால் என்ன?
பூமியின் தரைப்பரப்பிலிருந்து ஒருபொருளை சுமார் நொடிக்கு 11.2 கிமீ என்ற வேகத்தில் எறிந்தால் அந்தப் பொருள் பூமியின் ஈர்ப்பு விசையை மீறி வெளியேறிவிடும். இதுவே பூமியின் விடுபடு வேகம். பூமியைவிடப் பருத்த வியாழன் கோளில் இது 59.5 km/sec. குறிப்பிட்ட திணிவு கொண்ட பொருளில் விடுபடு வேகம் ஒளியின் வேகத்தைவிட மிஞ்சும் என ஜான் மிச்சல் (John Mitchell) எனும் ஆங்கிலேயே அறிஞர் 1783இல் நியூட்டன் இயற்பியலைக் கொண்டு கணிதம் செய்தார். இதுவே கருந்துளைகளின் துவக்க ஆய்வு. அதன் பின்னர் பிரெஞ்சு அறிவியல் அறிஞர் பியர் சிமோன் லாப்பிளாஸ் (Pierre-SimonLaplace) ஆறு கிலோமீட்டர் விட்ட பந்து அளவில் சூரியனின் மொத்த நிறையையும் அடைத்துவிட்டால் ஏற்றப்படும் ஈர்ப்பு புலத்தில் ஒளி கூட வெளியே வர முடியாது என்று கணிதம் செய்தார்.

எனினும் இருபதாம் நூற்றாண்டில்தான் இந்தக் கருத்து தீவிர ஆய்வுக்கு உட்பட்டது. ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் தத்துவத்தின் தொடர்ச்சியாக கார்ல் சுவார்ட்ஷில்ட் (Karl Schwarzschild) 1916 இல் கருந்துளைகள் என்கிற வினோத வான்பொருள் ஏற்படலாமென யூகம் செய்தார். அவரைத் தொடர்ந்து 1958இல் டேவிட் ஃபிங்கல்ஸ்டீன் (David Finkelstein) என்பார் கருந்துளைக்குள் என்ன சென்றாலும் திரும்ப வராது என்று நிறுவினார்.

1967இல் ஜான் வீலர் (John Wheeler) எனும் இயற்பியலாளர் ‘கருந்துளை’ (blackhole) என்ற பெயரைப் பிரபலப்படுத்த அதுவே நிலைத்துவிட்டது. எனினும் சாமானியர்களும் கருந்துளைகள் குறித்து கேள்விப் படவைத்த பெருமை கருந்துளை நாயகன் ஸ்டீபன் ஹாகிங்கைதான் சாரும்.

– த ஹிந்து –

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>