மதுபோதையில் வாகனம் செலுத்திய 245 பேர் கைது


9af8ff90-471e-4ead-b308-3ad59fa66512-large16x9_handcuffsarrestedmgn

கடந்த 24 மணி நேரத்திற்குள் மது போதையில் வாகனம் செலுத்திய 245 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சோதனை நடவடிக்கைகளின் போது போக்குவரத்து விதிகளை மீறிய மேலும் 10170 பேருக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் அதிகமானவர்கள் தங்காலை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் கைது செய்யப்பட்ட நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>