இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை வாபஸ்


Tamil_News_Apr_2019__56652247905732

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நேற்று (12) ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுலவேசி தீவில் 6.8 அளவில் நிலநடுக்கம் நேற்று பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிட்டிருந்தன.

இந்தோனேசியா சுலவேசி தீவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்ட்டர் அளவில் 6.8ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக கட்டிடங்கள், வீடுகள் அதிர்ந்துள்ளன. பீதி அடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில மணி நேரங்களில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதை அடுத்து பொதுமக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>