இஸ்ரேல் அனுப்பிய விண்கலம் சந்திரனில் விழுந்து நொறுங்கியது


israel

சந்திரனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரேலினால் அனுப்பப்பட்ட  விண்கலம் சந்திரனின் பரப்பில் மோதி நொறுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்திரனில் ஆய்வு செய்வதற்காக இஸ்ரேல் நாட்டினால் பெரஷீட் என்ற விண்கலம் தயாரிக்கப்பட்டது. கடந்த பெப்ரவரி மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம்,  2 மாதங்களாக பூமியைச் சுற்றி வந்துள்ளது. அதன் பின்னர் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்துள்ளது.

நேற்றிரவு (12) சந்திரனில் தரை இறங்கும் போது, விண்கலத்தின் பூமியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரேல் விண்வெளி நிறுவனம் அறிவித்துள்ளது.

சந்திரனில்ஆராய்ச்சி செய்வதற்காக தனியார் நிறுவனத்தின் நிதி உதவியோடு இஸ்ரேலினால் அனுப்பப்பட்ட முதலாவது விண்கலம் இதுவென தெரிவிக்கப்படுகின்றது.  (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>