வட கொரிய ஜனாதிபதியை சந்திக்க டொனல்ட் டிரம்ப் விருப்பம் தெரிவிப்பு


201809250353084897_Donald-Trump-expects-second-summit-with-Kim-Jongun-soon_SECVPF
வட கொரிய தலைவருடனான 2 வது சந்திப்பு தோல்வியில் முடிந்தாலும், அவரை மீண்டும் சந்திக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினர்.  இந்த சந்திப்பின் போது, கொரிய தீபகற்பம் அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றப்படும் என கிம் ஜாங் அன்  உறுதியளித்திருந்தார்.

இதன்பின்னர், இருநாட்டு உறவில் நீண்டகாலமாக நிலவி வந்த பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் உருவானது. வடகொரியா தனது வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை அடியோடு நிறுத்தியது.

இதற்கு கைமாறாக அமெரிக்கா தங்கள் மீது விதித்த பொருளாதார தடைகளை முழுமையாக திரும்பப் பெறவேண்டும் என வடகொரியா எதிர்பார்த்தது. ஆனால் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடாத வரையில் பொருளாதார தடைகளை திரும்பப்பெற முடியாது என்பது அமெரிக்காவின் நிலைப்பாடாக அமைந்தது.

இந்த விவகாரம் குறித்து பேசி சுமுக தீர்வுகாண டிரம்ப், கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருநாட்டு தலைவர்கள் வியட்நாமில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், எதிர்பார்த்தபடி இந்த சந்திப்பு இணக்கமாக நடைபெறவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனால், கடும் அதிருப்தி அடைந்த வடகொரியா, அமெரிக்கா தனது வாக்குறுதியை நிறைவேற்றாத வரையில் அணுஆயுத விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என அறிவித்தது.

இதனை கண்டிக்கும் விதமாக வடகொரியா மீது கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டல் விடுத்தது. இதனால் இருநாட்டு உறவில் மீண்டும் விரிசல் ஏற்படும் சூழல் உருவானது.

இந்நிலையிலேயே, கிம் ஜாங் அன்னுடன் 3 ஆவது முறையாக சந்திப்பு நடைபெறலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளது.  (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>