மாலிங்கவுக்கு மும்பாய் இந்தியன்ஸ் அணியில் இன்றும் வாய்ப்பு இல்லை


malinga

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்றைய (13) போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது.

மும்பாய் இந்தியஸ் அணியை 04 விக்கெட்டுக்களால் தோல்வியடையச் செய்தே இந்த வெற்றியை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஈட்டியது.

மும்பாய் இந்தியன்ஸ் அணி தனக்கு ஒதுக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு முகம்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தனது பதில் துடுப்பாட்டத்தின் போது 6 விக்கெட்டுக்களை இழந்து, 3 பந்துகள் மாத்திரம் எஞ்சியுள்ள நிலையில் தனது வெற்றி இலக்கை அடைந்துகொண்டது.

இன்றைய போட்டியின் போதும் லசித் மாலிங்கவுக்கு மும்பாய் இந்தியன்ஸ் அணியில் இடம் கிடைக்காமல் போனது முக்கிய அம்சமாகும். இந்தப் போட்டி மும்பாயிலுள்ள வன்கடே விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.   (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>