இன, மத பேதமின்றி வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள சிறந்த சந்தர்ப்பமே புத்தாண்டு- பிரதமர்


ranil wickramsinga

சிங்களத் தமிழ் புத்தாண்டு இன, மத பேதமின்றி இலங்கையர் அனைவரும் தமது வாழ்வினைப் புதுப்பித்துக் கொள்ளவும், அதனூடாக சமூகத்தைப் புதிய வழியில் பயணிக்கச் செய்வதற்கும் கிடைக்கும் அருமையான சந்தர்ப்பமாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டை மையப்படுத்திய எண்ணக்கருக்கள், சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் இயற்கை மற்றும் மனிதனுக்கிடையிலான உறவினைப் புதுப்பித்துக் கொள்வதுடன், மனித சமூகத்தில் அன்பு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை போன்ற மானிடப் பெறுமானங்களைக் கட்டியெழுப்புவதனை நோக்கமாகக் கொண்டு உருவாகியுள்ளன.

வடக்கு தெற்கு என்ற பேதமின்றி ஒட்டுமொத்த இலங்கை சமூகத்தினரும் ஒன்றிணைந்து கொண்டாடும் புத்தாண்டு எமது வாழ்வினதும், சமூகத்தினதும் மறுமலர்ச்சிக்கான தேசிய கலாசாரத் திருவிழாவாகும். புத்தாண்டுச் சம்பிரதாயங்களின் உண்மையான அர்த்தங்களைப் புரிந்துகொண்டு மானிடத்தை மேம்படுத்துவதற்கான, வாழ்வின் உண்மையான மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கான அபிலாசையுடன் அவற்றைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமானதாகும்.

இலங்கைவாழ் உங்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி, செழுமை மிகுந்த இனிய புத்தாண்டாக அமையட்டும் என உளப்பூர்வமாக வாழ்த்துகிறேன் எனவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.   (மு)

 

15 comments

 1. We are already in a peace, no need to renew but don’t recreate your strategy to create ethnic violence for your political game

 2. ஆகவே திகனையை மரந்து விடுவோம்
  மத்திய வங்கியையும் மரந்து விடுவோம்

 3. குனூத் ஓதி கிடைத்த பொக்கிசம்

 4. சொல்லிடிங இலியா.. கெலம்புஙே….

 5. Mohammed Shakir X Shakir X

  Nadu nasama pooyashshu oru oonai inda nai ehoodi nasrani vala valisolranam porampookku.

 6. இன மத பேதம் எல்லா வாழ்துக்களிள் மட்டும் தான் சொல்வார் செயலில் இல்லை

 7. எப்படி திகன போன்றா பிரதமரே!???

 8. நீ உலக மஹா #நடிகன் டா

 9. Rizvi Ahamed Segu Mohideen

  போதும்

 10. Wasantha Ranees Kumar

  நீ உலக மகா நடிகன்டா முஸ்லிம்களின் முதல் எதிரி நீதான் என்று அப்போதே தலைவர் அஷ்ரப் கனித்து சொல்லிட்டார் சிறுபான்மை மக்களுக்கு மிகவும் ஆபத்தானவர் ரனில் ரனிலுடன் எந்த காலத்திலும் கூட்டு சேரவும் மாட்டேன் ஆதரவு அழிக்க மாட்டேன் என்று சொல்லிட்டார் அவன்தான் தலைவன் அதைதான் இரு நாட்களுக்கு முன் ஜனாதிபதி மைத்திரி சொன்னார் முஸ்லிம் மக்களை ஓட்டுக்காக மட்டும் யூஸ் பன்னுபவன் ரனில் அவன் முக்த்திறையை அப்போதய கனித்து மக்களுக்கு பொது மேடையில் சொல்லி விழிப்புணர்வை கொண்டு வந்தவர் மர்ஃஹும் அஷ்ரப் அதனால்தான் இன்னும் அவர் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இறிக்கிறார் ரவூப் ஹக்கிம் பதவி மோக பிடித்தவன் அஷ்ரப் பெயரை வைத்து மக்களை ஏமாற்றிக் கொண்டு பிழைக்கிறான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>