24 மணி நேர சோதனை, 234 பேர் கைது, 6651 பேருக்கு எதிராக வழக்கு- பொலிஸ்


driver

பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது மது போதையில் வாகனம் செலுத்திய 234 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (13) காலை 6.00 மணி முதல் இன்று (14) காலை 6.00 மணி வரையில் மேற்கொள்ளப்பட்ட 24 மணி நேர சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப் பகுதிக்குள் மோட்டார் போக்குவரத்து தொடர்பான 6651 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கடந்த 11 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 771 பேர் மொத்தம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 26425 போக்குவரத்துச் சட்டங்களை மீறியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.  (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>