அமெரிக்கா இலங்கை தமிழ், சிங்கள மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து


stock-photo-sri-lanka-flag-with-american-flag-isolated-on-white-background-427533226

இலங்கையுடன் பலமான உறவைக் கட்டியெழுப்பி எதிர்காலத்தில் நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் மோர்கன் ஒடகஸ் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் இதனைக் கூறியுள்ளார். சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு ஒன்றுபட்டு எதிர்காலத்தில் தெற்காசியா வலயத்தில் உள்ள சவால்களை வெற்றி கொள்ள அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

சிங்கள, தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் இலங்கை மக்களுக்கு, அமெரிக்க அரசாங்கத்தினதும், அமெரிக்க மக்களினதும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.  (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>