இன்றிரவு நாட்டின் பல பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யலாம்- வ.தி.


rainy weather

நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு இன்றிரவு (14) இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய, சபரகமுவ, தெற்கு, ஊவா, வட மேல் மற்றும் மேல் ஆகிய மாகாணங்களிலும், அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

சப்ரகமுவ, மத்திய  மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ. மழை வீழ்ச்சி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பிரதேசங்களில் சிறியளவில் காற்று வீசும் நிலை காணப்படும் எனவும் மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் திணைக்களம் பொது மக்களைக் கேட்டுள்ளது.  (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>