மீண்டும் நாட்டைக் குழப்ப விரும்பினால் ஜனாதிபதிக்கு செய்யலாம்- ஐ.தே.க.


VAP-Festival-President-Maithri-PM-Mahinda-5

ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்கு முன்னர் அரசியலில் மீண்டும் ஒரு புரட்சியை ஏற்படுத்தப் போவதாக கூறப்படும் செய்தியில் உண்மை எதுவும் இல்லையெனவும், ஜனாதிபதி மீண்டும் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்ய விரும்பினால், அவ்வாறான ஒரு நடவடிக்கையில் ஈடுபடலாம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி அமைப்பாளரும், அமைச்சருமாகிய அஜித் பீ. பெரேரா தெரிவித்தார்.

சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட ஒரு முறைமையிலன்றி அரசியல் புரட்சியை ஏற்படுத்த முடியாது. பிரதமரை மாற்றுவதாயின் பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் வேண்டும். இதற்கு முன்னர் ஜனாதிபதி இதுபோன்ற ஒரு வேலையை செய்து மாட்டிக் கொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தரப்பில் இந்த அரசியல் புரட்சி தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வதில்லை. அரசியல் நடவடிக்கையை குழப்ப முயற்சிப்பவர்களே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தனியார் வானொலிக்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.  (மு)

 

 

3 comments

  1. iza solrawanukku nee pooie kaylu awanda ummakku maappula irukka endu…?

  2. neeggaluwalda allaththukkum muzal kaaranam pundamaanuwal.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>