பிரான்ஸ் புராதன தேவாலயத்தில் தீ


234

பிரான்ஸ் நாட்டின் முக்கிய சுற்றுலா தளமான நோட்ரிடேம் தேவாலயத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் தேவாலயத்துக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள 850 வருட பழமையான தேவாலயமே நோட்ரடேம் கதீட்ரல் ஆகும். பிரான்சின் பாரம்பரியமான சின்னமாக திகழும் இந்த தேவாலயத்தில் இன்று அதிகாலை (16)  12.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தேவாலயத்தின் மேற்கூரையில் ஏற்பட்ட தீயானது வேகமாக பரவி அப்பகுதி முழுவதும் தீக்கரையானது. கதீட்ரல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் குறித்தோ, தீயில் சிக்கி யாரேனும் தவிக்கிறார்களா என்பது குறித்தோ இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை எனவும் கூறப்படுகின்றது.

தேவாலயத்தில் எப்படி தீப்பிடித்தது என்பது குறித்த காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிட்டதட்ட 6 மில்லியன் யூரோ செலவில் இந்த தேவாலயத்தின் சிகரம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

தேவாலயம் தீக்கிரையானதற்கு பிரான்ஸ் அரசு தனது கவலையை வெளியிட்டுள்ளது.  இது பிரான்ஸ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இதற்கு தனது கவலையை டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>