51 வீதத்துக்கும் அதிக மக்கள் ஆதரவைப் பெறும் வேட்பாளர் எம்மிடம் உண்டு- மஹிந்த


mawe

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்குள் எந்தவித கருத்து முரண்பாடுகளும் இல்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

51 வீதத்துக்கும் மேலதிக வாக்குகளைப் பெறக் கூடிய தகுதியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தமது கூட்டணியில் இருப்பதாகவும், அவரை தகுந்த நேரத்தில் வெளிப்படுத்துவோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ மேலும் கூறியுள்ளார்.

இன்று (19) நுவரெலிய வலபனே மந்தாரம்நுவர பிரதேசத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க் கட்சிக்குள் கருத்து முரண்பாடு இல்லை. எமது இறுதித் தீர்மானத்தை எடுத்ததன் பின்னர் புத்தியுள்ள மக்கள் அதனை நன்கு விளங்கிக் கொள்வார்கள்.

மக்களுக்கு இன்று நீர் இல்லை. குடிநீர் இல்லை. குறைந்த பட்சம் தோட்ட மக்கள் கேட்ட சம்பள உயர்வைக் கொடுக்க இந்த அரசாங்கத்துக்கு முடியாமல் போனது. எமது ஆட்சிக் காலத்தில் கேட்டதைக் கொடுத்தோம். தற்பொழுது தோட்டப்புற மக்களுக்கு தீர்மானம் எடுக்கும் காலம் வந்துள்ளதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் மேலும் கூறியுள்ளார்.   (மு)

17 comments

 1. Abdur Rahman Muhammad Naseem

  Is that MY3 are you speaking about? 😝😇

 2. Abdur Rahman Muhammad Naseem

  Is that MY3 are you speaking about? 😝😇

 3. Abdur Rahman Muhammad Naseem

  Is that MY3 are you speaking about? 😝😇

 4. தேங்காய்.கலவெடுத்தவன்களா.எல்லா.பெயரையும்.அப்பச்சி.அறிவிக்கவும்

 5. Like 123 seats during Oct.2018

 6. kadum kastem inte more yarum 51 veetem edukke eala

 7. Yes we want Nagalanda Kodituwakku

  Only fearless person to talk on behalf of our unspoken people of this country.
  All Sri Lankan will vote for Nagalanda Kodituwakku fight against corruption of this country

 8. வாழ்க வளமுடன்

  என்ன திரும்பவும்
  ஜோசியம் பார்த்தமாதிரி
  தெரிகிது?

 9. محمد رسن مظهر

  very dangerous man, i never need to see him again

 10. It was MY3 who got more than 51…

 11. மைத்திரிபால சிறிசேனா மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி இடும் முடிவிலேயே இருக்கின்றார். அதற்காகச் சென்ற வருடம் மஹிந்தவுடன் கைகோர்த்து அவரைத் திருட்டுப் பிரதமர் ஆக்கிச் சட்டப்படியான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கலைத்தார். ராஜபக்சே குடும்பத்தினர் கோதாபய ராஜபக்சே அவர்களை ஜனாதிபதி வேட்பாளராக ஆக்கும் முயற்சியைக் கண்டதும் அவரது கனவு கலைந்தது. தற்போது சஜித் பிரேமதாச அவர்களைப் பிரதமராக ஆக்குவதாகக் கூறி ஐ.தே.க.வில் இருந்து சில உறுப்பினர்களைத் தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் இருக்கின்றார். போதைப் பொருட்களை ஒழித்த ஒரு தலைவனாகத் தன்னை அடையாளம் காட்டுகின்றார். ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ,ராஜபக்சே குடும்பத்து வேட்பாளர், ஜே.வீ.பி. அபேட்சகர் மற்றும் மைத்திரிபால ஆகிய நான்வரும் போட்டி இடும்போது மக்கள் எப்படி வாக்கு அளிப்பார்கள்? 2020 ஆண்டு இலங்கையின் ஜனாதிபதி யார்?

 12. Abdur Rahman Muhammad Naseem

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>