தாய்லாந்து மன்னர் வஜிராவுக்கு 4 ஆவது திருமணம்


Tamil_

தாய்லாந்து மன்னர் வஜிரா லோங்கோர்ன் அந்நாட்டு பாதுகாப்பு பெண் அதிகாரியை 4 வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

வஜிரா லோங்கோர்ன் (66) தாய்லாந்து நாட்டின் 10 வது ராமா என்று அழைக்கப்படுகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது தந்தையின் மறைவுக்கு பின்னர் புதிய மன்னராக பொறுப்பேற்றார். சென்ற புதன் கிழமை இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் அவர் தனது பாதுகாப்பு பெண் அதிகாரி சுஜிதா திட்ஜாயை திருமணம் செய்து கொண்டுள்ளார். நான்காவது திருமணம் செய்து கொண்ட வஜிரா,  தனது  மனைவியை உடனடியாக தாய்லாந்து நாட்டின் அரசியாக அறிவித்துள்ளார்.

இதற்கு முன்பு தாய் ஏர்வேஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக சுஜிதா பணியாற்றியுள்ளார். விமான பயணத்தில் ஏற்பட்ட சந்திப்பின்போது, மன்னருக்கும், சுஜிதாவுக்கும் இடையே காதல் பிறந்துள்ளது.

இதன் பின்னர் மன்னரின் பாதுகாப்பு  பிரிவில் அதிகாரியாக சுஜிதாவை இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்தே இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

மன்னர் வஜிரா ஏற்கனவே மூன்று திருமணங்களை செய்து விவகாரத்து பெற்றுள்ளார். முன்னாள் மனைவியர் மூலம் இவருக்கு 7 குழந்தைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.   (மு)

One comment

  1. Muslim 4 mudikkiraar tappu seiraarhal Ewan eanna muslima

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>