ராஜாளி பறவைக்கு அபுதாபியில் விசேட மருத்துவமனை


ff

உலகிலேயே அதிக வேகத்தில் பறக்கக்கூடிய பறவையான ராஜாளி பறவைக்கு அபுதாபியில் முதல் முறையாக தனியான விசேட வைத்தியசாலையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பறவை மணிக்கு 389 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. வானில் பறக்கும் போதே 2 கிலோ மீட்டருக்குள் இருக்கிற இரையை குறிவைத்து விட்டால் அடுத்த 4 நிமிடங்களில் இரையைப் பிடித்து விடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பார்வையும் அதீத வேகமும்தான் ராஜாளி பறவையின் பலம் எனக் கூறப்படுகின்றது.

இந்த வகை ராஜாளி பறவைகள் அரபுநாடுகளில் அதிகம் காணப்படுகின்றன. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பலர் ராஜாளியை செல்லப்பிராணியாக வளர்த்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ராஜாளி பறவைகளுக்கு அந்நாட்டு அரசு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ராஜாளி பறவையை அதன் உரிமையாளர்கள் விமானத்தில் எடுத்து செல்ல ஏதுவாக, அந்த பறவைகளுக்கென தனியாக கடவுச் சீட்டும் வழங்கப்படுகிறது.

இங்கு அவற்றின் அலகு, கால் நகங்களை சுத்தம் செய்தல், தேவையான மருந்து வழங்குதல் போன்ற முதலுதவி சிகிச்சை முதல் அறுவை சிகிச்சை வரை அனைத்து வகையான மருத்துவ சேவைகளும் இந்த வைத்தியசாலையில் வழங்கப்படுகின.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>