அனைத்து ஊடகங்களும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் – ஐ.எம்.இஸ்திஹார்


IMG_20180820_100756

இலங்கையின் ஊடகங்களும் ஊடக தர்மத்தை மீறி இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை சீர்குலைக்கும் விதமாக பக்கச் சார்பான கருத்துக்களையும் செய்திகளையும் வெளியிடுகின்றன இவை முற்றாக நிறுத்தப்பட வேண்டும் அனைத்து ஊடகங்களும் பொறுப்புடன் இனங்களுக்கிடையில் விரிசல் நிலையை ஏற்படுத்தாது ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் விதமாக நாட்டை மீண்டும் கட்டியெலுப்பும் வகையில் ஊடக செயற்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என அக்குறணை பிரதேச சபையின் தலைவர் ஐ.எம்.இஸ்திஹார் தெரிவித்தார்

அக்குறணை பிரதேச சபையின் மாதாந்த பிரதேச சபை பொதுக் கூட்டம் நேற்று திங்கள் கிழமை காலை அளவதுகொடை நகரிலுள்ள அக்குறணை பிரதேச சபை கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றபோது அதில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்

தாக்குதலின்போது உயிர் நீத்தவர்கலுக்கு பிரதேச சபை கூட்டத்தில் இரண்டு நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்;
“தீவிரவாதிகள் தேடிக்கண்டுபிடித்து அடியோடு ஒழித்துக்கட்டப்பட வேண்டும் அதற்காக நாம் அனைவரும் ஒன்றினைய வேண்டும் தீவிரவாதிகளை தேடிக்கொண்டு பிடிப்பதற்கு முஸ்லிம்கள் அதிகளவில் பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்களை வழங்கி வருகின்றனர். இது குறித்து ஊடகங்கள் மெளனம் காக்கின்றது அண்மையில் சாய்ந்தமருந்து பிரதேசத்தில் இருந்த தீவிரவாதிகள் குறித்த தகவல்களை முஸ்லிம்களே வழங்கினர் அதற்காக பொலிஸ் திணைக்களம் தலா பத்து இலட்சம் ரூபா பண பரிசுகளுன் வழங்கப்பட்டன. அவ்வராயின் முஸ்லிம் சமூகம் மீது தீவிரவாதிகள் என்ற போர்வையில் முத்திரை குத்துவது எந்தவித்தில் நியாயம்?”

இஸ்லாமிய முஸ்லிம் சாயம் பூசப்பட்டு குறிப்பிட்ட ஒரு சிலரினால் கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை முஸ்லிம் சமூகம் என்ற வகையில் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என்பதுடன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எமது அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இன்று உலகளாவிய அளவில் தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன இவற்றுக்கு இஸ்லாமிய, முஸ்லிம் பயங்கரவாதம் என பெயர் சூட்டப்பட்டாலும் அதனை ஆராய்ந்து பார்த்தால் முஸ்லிம்களுக்கும் பயங்கரவாதத்திற்கும் எந்த வித தொடர்பும் இருக்காது ஆனால் ஊடகங்கள் வேண்டுமென்று முஸ்லிம்கள் மீது பலி சுமத்துகிறது இது திட்டமிட்ட சதி இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் ஒருபோதும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதில்லை ஆதரிக்கவும்மில்லை காலனித்துவ ஆட்சி காலப்பகுதி முதல் முஸ்லிம் முன்னோர்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்து பாடுபட்டவர்கள் இதனை பலரும்
மறந்து விட்டனர் தீவிரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை நாம் இலஙகையர் எனும் தேசிய உணர்வுமிக்கவர்கள் நாம் நமது தாய் நாட்டை பாதுகாக்க வேண்டும் எமது எதிர்கால சந்ததியினருக்காக வளமான பாதுகாப்பான ஒரு நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.

இலங்கை வரலாற்றில் முஸ்லிம் மக்கள் ஒருபோதும் தீவிரவாதத்திற்கோ, பயங்கரவாதத்திற்கோ ஆதரவளிக்கவில்லை இஸ்லாமிய மார்க்கமும் அதனை போதிக்கவில்லை முஸ்லிம் சமூகம் என்ற வகையில் ஓர் இலங்கையின் கீழ் எனைய இன மதத்தவர்களோடு அன்போடும் பன்போடும் இணைந்து வாழ விரும்புகின்றவர்கள், நாம் அன்றும் இன்றும் நாளையும் தீவிரவாதத்தை எதிர்கின்ரோம்.

இத்தாக்குதலினால் வேதனைப்படும் கிறிஸ்தவ, கத்தோலிக்க, இந்து சிங்கள மக்களை விட இன்று முழு முஸ்லிம் சமூகமும் தாக்குதலையிட்டு வேதனைப்படுகிறது.

போலி முஸ்லிம் பெயர் தாங்கிய குறிப்பிட்ட ஒரு சிலரினால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலுக்கு முழு முஸ்லிம் சமூகத்திற்கும் கை நீட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது இந்த துரதிர்ஷ்டவச சம்பவத்தின் பின் மதத் தலைவர் என்ற வகையில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரன்ஜித் ஆண்டகையின் செயல்பாடுகள் மற்றும் வழிகாட்டல்கள் பாராட்டத்தக்கது அதற்காக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

குறித்த தாக்குதல்களை மேற்கொண்ட தீவிரவாதக் குழுவினால் முழு முஸ்லிம் சமூகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் பிண்ணனியில் உள்ள தீவிரவாதிகளோ அரசியல்வாதிகளோ எந்த அமைப்போ இருந்தாலும் அவர்கள் உடனடியாகப் பூண்டோடு அழிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு பகிரங்கமாக மரணதண்டனை வழங்க வேண்டும். எமது மூதாதையர் காலந்தொட்டு சகவாழ்வுடன் எமது தாய்நாட்டில் வாழ்ந்து வரும் நாம் தற்போது சர்வதேச ரீதியான பல்வேறு சக்திகள் எமக்குள் ஜாதிச் சண்டைகளை உருவாக்கி நாட்டை சூராட முற்படுகின்றன இவற்றுக்கு ஒருபோதும் இடமளிக்காமல் அனைவரும் சாதி, இனம், மதம, குலம் கோத்திர வேறுபாடுகளின்றி நாட்டை ஒருமுகப்படுத்த ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்

பிரதேச சபையின் ஆலும் கட்சி மற்றும் எதிர் கட்சி தலைவர் ஆஜ்மீர் பாரூக் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும்  தமது உரையின் போது இப்பயங்கரவாதத் தாக்குதலுக்குககு வன்மையாக கண்டனம் தெரிவித்து உரையாற்றினார்கள். (ஸ)

-ராபி சிஹாப்தீன்-

IMG_20190507_112251

 

5 comments

  1. Isthihar Imadudeen

  2. சேர் அப்டி ஒரு ஊடகமும் நடக்குதில்ல… ஒங்களுக்கு தெரிஞ்ச சட்டத்த வெச்சி கேச போடுங்கோ நாங்க சப்போரட் பன்றம்…

  3. சேர் அப்டி ஒரு ஊடகமும் நடக்குதில்ல… ஒங்களுக்கு தெரிஞ்ச சட்டத்த வெச்சி கேச போடுங்கோ நாங்க சப்போரட் பன்றம்…

  4. Very late its ok

  5. Very late its ok

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>