10 பயங்கரவாதிகளின் குற்றத்தை 22 லட்சம் பேர் மீது திணிக்க வேண்டாம்- அமைச்சர் ரிஷாட்


rishad bathiudeen

இஸ்லாத்தின் பெயரை வைத்துக்கொண்டு ஒருசிலர் செய்த பயங்கரவாதத் தாக்குதல், நாட்டில் உள்ள 22 இலட்சம் முஸ்லிம்களையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் நேற்று (10) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

பள்ளிவாசல்களில் வாள்கள் மற்றும் கத்திகள் மீட்கப்படுவதாக ஊடகங்களில் காண்பிக்கின்றனர். திகனவில் 30 பள்ளிவாசல்கள் அடித்து நொருக்கப்பட்டபோது பள்ளிவாசல்களில்  ஆயுதங்களை வைத்திருந்தவர்கள் அவற்றை எடுத்து யாரின் மீதாவது தாக்குதல்களை நடத்தினார்களா? பத்துப்பேர் செய்த பாவத்தை 22 இலட்சம் பேர் மீது திணிக்காதீர்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் சகலருக்கும் நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். குறிப்பாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு நன்றிகளைக் கூறுகின்றேன். உடனடியாக செயற்பட்ட முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கும் நன்றிகளைக் கூறிக்கொள்கின்றேன் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.   (மு)

 

8 comments

 1. Well said sir some idiots thinking wrong mind

 2. Well said sir some idiots thinking wrong mind

 3. எங்கள். தலைவா

 4. 10 mannula neeyum oruvanaa??????

 5. என்னடா மஹிந்தவின் காலத்தில் அவரது குடும்பத்தில் அனைவருக்கும் சொத்த்க்கள் இருந்தபோதும் கொளைகாரக் கருனா விடுதலை யானபோதும் அதைவிமர்சிக்க வக்கில்லாத தமிழனும் ஊடாகமுமை அரசியல் வாதியும்
  இப்போது இந்த விடயத்தில் மூக்கை நுலைத்து மயிர் பீடுங்க நினைபது வேதனை. நாளை இதைவிடப் பெரிய பிரச்சனை உங்களுக்கும் வரலாம் மரந்து விடாதே

 6. என்னடா மஹிந்தவின் காலத்தில் அவரது குடும்பத்தில் அனைவருக்கும் சொத்த்க்கள் இருந்தபோதும் கொளைகாரக் கருனா விடுதலை யானபோதும் அதைவிமர்சிக்க வக்கில்லாத தமிழனும் ஊடாகமுமை அரசியல் வாதியும்
  இப்போது இந்த விடயத்தில் மூக்கை நுலைத்து மயிர் பீடுங்க நினைபது வேதனை. நாளை இதைவிடப் பெரிய பிரச்சனை உங்களுக்கும் வரலாம் மரந்து விடாதே

 7. 😜👻😜👻😜

 8. வீராப்பாகப் பேசுகின்றோம் என்று நினைத்துக்கொண்டு எமது தலைவர்கள் (என தம்மைத் தாமே பிரகடனம் செய்தவர்கள்) முன்வைக்கின்ற கருத்துக்கள் எமது மக்களை மேலும் சிக்கலான நிலைமைக்குள் தள்ளிவிடுகின்றது. குறித்த தாக்குதலைப் பத்துப் பேர்தான் திட்டமிட்டார்கள், செய்தார்கள் என்று வைத்துக்கொள்வோம், அவர்கள் யார்? அவர்கள் தம்மை எந்த சமூகத்தோடு தம்மை அடையாளப் படுத்தினார்கள்? ஒரு குழந்தை தவறு செய்துவிட்டது என்பதற்காக ஒரு தாய் தனது மகனை தனது மகனல்ல என்று கூறுவதில்லை, நமது விரல் நமது கண்ணைக் குத்திவிட்டது என்பதற்காக எமது விரலை நாமே வெட்டிவிடுவதும் இல்லை. முதலில் இந்த நாசகார செயலை எமது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 10பேர் செய்திருக்கின்றார்கள், இது ஒரு மனிதாபிமானமற்ற பயங்கரவாதச் செயல், இதனால் நாம் அதிர்ச்சியும் வேதனையுமடைகின்றோம், இத்தகைய பயங்கரவாதிகள் எமது சமூகத்தில் இருந்து வெளிப்பட்டிருக்கின்றார்கள் என்பது எமக்கு மிக அதிர்ச்சியை உண்டுபண்ணுகின்றது, இவ்வாறான பயங்கரவாதச் செயல்களுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களும் தமது கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துகின்றார்கள், முஸ்லிம்சமூகத்தினுள் நுழைந்திருக்கின்ற பயங்கரவாத்தத்தை அதனுடைய ஆணிவேரோடு களைவதற்கு நாம் இலங்கை மக்களோடும், இலங்கை அரசாங்கத்தோடும் இணைந்து செயற்படுவோம். என்று கூறுவதற்கு உங்களுடைய வாய்களில் என்ன கொழுக்கட்டையா திணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>