பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க அனைத்து நாடுகளும் கைகோர்க்க வேண்டும் – ஜனாதிபதி


Screen Shot 2019-05-15 at 3.42.32 PM

சமய தீவிரவாதத்தினால் உருவாகும் பயங்காரவாதம் உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு அனைத்து நாடுகளும் நட்புறவுடன் கைகோர்க்க வேண்டுமென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று (15) முற்பகல் சீனாவின் பீஜிங் நகரில் ஆரம்பமான ஆசிய நாகரிகங்கள் பற்றிய சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் அவர்களின் தலைமையில் இன்று முற்பகல் பீஜிங் நகரில் ஆரம்பமானதுடன், அம்மாநாட்டில் விசேட விருந்தினராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டார்.

47 நாடுகளின் அரச தலைவர்கள் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டிருந்ததுடன், உலகளாவிய ரீதியில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும் மனித இனத்தின் இருப்புக்காக உலக மக்கள் மத்தியில் பரஸ்பர
நம்பிக்கையையும் கௌரவத்தையும் பாதுகாக்கும் நோக்குடன் ஆசிய நாகரிகங்கள் பற்றிய விரிவாக கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுதல் இந்த மாநாட்டின் நோக்கமாகும். இம்மாநாடு மே 22ஆம் திகதி வரை பிஜிங் நகரில் நடைபெறும்.

ஆசிய நாகரிகங்கள் பற்றி கலந்துரையாடும் இந்த மாநாட்டில் எழும் குரல்களும் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் அவர்களின் தலைமைத்துவத்தில் நட்புறவு அமைப்பாக உருவாகும் ஐக்கியமும் சர்வதேச பயங்கரவாதத்தையும் சமயத் தீவிரவாத பயங்கரவாதத்தையும் ஒழிப்பதற்கான சக்தியாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி இம்மாநாட்டில் கருத்து தெரிவித்தார். ஒரு நாகரிகத்தை மற்றுமொரு நாகரிகத்தினால் அடிமைப்படுத்த முடியாது என்றும் நாகரிகத்தையும் கலாசாரத்தையும் சட்டத்தினால் அல்லது சர்வதேச கட்டளையினால் அடிமைப்படுத்த முடியாதென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இலங்கையின் நாகரிகம் 2600 வருடங்களுக்கு மேற்பட்ட பௌத்த நாகரிகத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டிருப்பதுடன், சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலேயர், பறங்கியர் ஆகிய இனங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர் என்றும் அவர்கள் பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமயங்களை சேர்ந்தவர்கள் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

எந்தவொரு நாட்டுக்கும் எந்தவொரு இனத்திற்கும் எந்தவொரு நாகரிகத்திற்கும் அல்லது கலாசரத்திற்கு அச்சுறுத்தலாக இல்லாத வகையில் சுதந்திரமாகவும் அமைதியாகவும் செயற்பட்டுவரும் ஒரு நாடு என்ற வகையில் இலங்கையின் நாகரிகம் மற்றும் கலாசாரத்திற்கு மறைமுகமான சக்திகளினால் விடுக்கப்படும் சவால்களின்போது அனைவரும் ஒருமித்து கைகோர்க்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

எனவே தமக்கே உரித்தான நாகரிகம் மற்றும் கலாசரத்தின் முக்கியத்துவத்துடன் ஒரே தேசமாக அனைத்து நட்புறவு நாடுகளுக்குமிடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதற்கான விரிவான சர்வதேச நிகழ்ச்சித்திட்டமொன்றின் அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும், சீனா போன்ற பெரும் நாகரிகமொன்றைக் கொண்டுள்ள நாட்டில் இவ்வாறானதொரு மாநாடு நடத்தப்படுவதன் மூலம் அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியதாகுமென்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி , இந்த மாநாட்டில் இலங்கையும் பங்குபற்றுவதற்கு சந்தர்ப்பமளித்தமைக்காக சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் உள்ளிட்ட சீன அரசாங்கத்திற்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

Screen Shot 2019-05-15 at 3.42.57 PM Screen Shot 2019-05-15 at 3.42.46 PM

32 comments

 1. அப்ப சீனாக்கு போனது நாடு பத்தி எறியும் போது

 2. அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டு இவருக்கு நல்லா டியூசன் குடுக்கணும் நாட்ட வழி நடத்த.. ஹொலிவூட் இவருக்கிட்ட இருந்து டியூசன் எடுக்கணும். ~ஜனாதிபதி தாத்தா~

 3. Ahamadulebbai Razeed Kamaldeen

  சேர் நீங்க நடிக்காதிங்க நீங்க இரணீடு தல நாகம் என்பது எங்கழுக்கு தெரியும்

 4. Motanang pissuma thamai moda sira

 5. இலங்கையில்முதலாவது.பவ்ததீவிரவாதத்தை.இல்லாமசெய்யும்.அடுத்தநாட்டில்போய்.பிச்சைபோடசொல்லும்தீவிரவாதத்தை.ஒடுக்க.

 6. Alabdeen Abdul Uyoob

  First stop interference of America and Israel, then there won’t be extremist from any religion and will have peace for ever.

 7. First stop buddies terrorist in Sri Lanka

 8. இனங்களுக்கிடையில் ஒற்றுமை வரும் வரை தீவிரவாதங்களை ஒழிக்க முடியாது.

 9. அப்துல் ஸமத் அப்துல் ஸமத்

  போடா பொண்ன தடியா

 10. முதல் நீ சிங்கலவனெ கட்டுப்படுத்து

 11. Jowfeer Mohamed Jowfeer

  எல்லா நாடு சபோட் பன்னெ வேண்ட அவசியமில்லை சட்டத்தை பாகுபாடு பார்க்காது கடுமையானதாக வழங்கினால் எல்லாம் சரியாக வரும் கலவரம் என்ற பேரில் சிங்களபேரினவாதிகள் ஒன்று திருடுரார்கள் இல்லை சொத்தை சேதம் செய்கிறார்கள் இவர்களுக்குள் இருப்பது கள்ளத்தனம் பொறாமை இதில் மதம்போதிக்கும் பிக்குகள் ஒருசிலபேர் வன்முறை தூண்டும்பேச்சு ஆதாரம் இல்லாத பேச்சி இதைல்லாம் முஸ்லிம் அல்லது தமிழர்கள் செய்தால் சட்டாம் அவர்கள் மீது வன்மையாக பாயுகம் இதுதான் இந்த நாட்டை ஆளும் அரசாங்கத்தவர்களின் நிலைமையாக அன்மைக்காலத்திலிருந்து நடந்து கொண்டு வருகிரேது

 12. Politics terrorist in srilankan

 13. Anda bayangara vadatha valakkurade ninga thane

 14. Janadipathithumani ape rate prasnayak unoth apithama eya prasna visadaganna one pita rataval idala udavak onnaha ape rata prasna visadaganna habai obathuma mokada kare rate inna Muslim janathavage depolata gini thibba man kolla kanna kattiya a okkoma karala obathuma giya China valata higa kanna

 15. Boruuuuuu my3

 16. முதல் சிங்கள பயங்கர பயங்கரவாதிகலை ஒழிங்க இரட்டை வேடம் போடும் தந்திரி மாமா

 17. முதல் உங்களுடைய சிங்கள தீவிரவாதிகளை கட்டுப்படுத்துங்கள்

 18. யார் பயங்கரவாதி சிங்களவனான உனக்கு சிங்களவன் பயங்கரவாதியாக தெரியவில்லையா அட அது எப்படி தெரியாமல் இருக்கும் நீயும் பயங்கரவாதிதான்

 19. 1st srilanka ellamaakve periya kastam

 20. கௌரவ ஜனாதிபதி அவர்களே முதலில் இந்த விரட்டை வேடம் போடுவதை நிறுத்துங்கள் முதலில் நம் நாட்டில் இனவாதத்தை கட்டுப்படுத்துங்கள் மூவின மக்களுக்கும் சமமான ஆட்சியை வழங்குங்கள்

 21. உங்களால் இயலாத இயலாவிட்டால் கோத்த பாயவிடம் ஆலோசனை கேழுங்கள்

 22. Pondayandi ..1st close ue sakuliyans woeks.

 23. எல்லாம் சூழ்ச்சி மூலம்தான் நடக்குது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை……(அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள் அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான் சூழ்ச்சி செய்வதில் அல்லாஹ் மிக அற்புதமானவன் உங்கள் மீது அதிக அன்பு கொன்ட அல்லாஹ்விடம் கையேந்தி கேளுங்கள் நிச்சயம் உதவி செய்வான்…

 24. Evlevu naala engaiya irnthe

 25. முதலில் இங்கு உள்ள நன்டான் சுன்டான் எல்லாம் ஒன்று சேருங்கள். அதற்கு அப்புறம் உலக நாடுகளை சேர்கிறது பற்றி யோசிப்போம்…😂😂

 26. Mohammed Wazeer Zafry

  Pakko essarla jatywada nawanthapang

 27. ஜனாதிபதி அவர்களே நீங்கள் வெளிநாடுகளிலிருந்து அறிக்கை விடுவதை விட்டு விட்டு உள்நாட்டில் நடக்கின்ற இனக்கலவரத்தை முதலில் அடக்கி வையுங்கள் நாட்டில் நடக்கின்ற கலவரத்தை உங்களால் அடக்க முடியாத நீங்கள் சர்வதேசத்தில் உள்ள தீவிரவாதிகளை எப்படி அடக்க போகிறீர்கள் இது வேடிக்கை அல்லவா மஹிந்த ராஜபக் செய்யும் உள்நாட்டில் இனக்கலவரங்கள் நடக்கும் போது அவரும் வெளிநாடு சென்று விடுகிறார் அதேபோன்று உங்களுடைய வெளிநாட்டுப் பயணம் அதேபோன்று உள்ளதல்லவா இந்த நாட்டை ஆள்வது யார் இனத்துவேசம் படைத்தவர்களா அல்லது ஜனாதிபதி அவர்களா

 28. Jenthiran Batticaloa Mahiloor

  மைத்திரி அங்கிள்ளுக்கு ஒரே கமடிதான் சைனாவுக்கு போய் போர் பயிற்சி எடுத்து முடிஞ்சா அங்கிள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>