குளவி கொட்டுக்கு இலக்காகிய 6 பேர் வைத்தியசாலையில்


DSC06946

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை பாமஸ்டன் தோட்டத்தில் இன்று முற்பகல் 12 மணியளவில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 6 பேர் குளவிகொட்டுக்கு இலக்காகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மரம் ஒன்றில் இருந்த குளவி கூடே இவ்வாறு கலைந்து வந்து தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுமதிக்கப்பட்ட 6 பேரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குளவி கொட்டுக்கு இலக்கானவர்களில் 5 பேர் பெண் தொழிலாளர்கள் எனவும் ஒருவர் ஆண் தொழிலாளர் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.(அ)

-க.கிஷாந்தன்-
DSC06942

DSC06945

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>