வெசாக் தினத்தில் விடுதலை செய்யப்படுவோர் பட்டியலில் ஞானசார தேரர் இல்லை


galagoda aththe gnanasara

இம்முறை வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்படுவோர் பட்டியலில் கலகொட அத்தே ஞானசார தேரரின் பெயர் இல்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தற்போது வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில தினங்களாக அவரை சுகம் விசாரிக்க சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என கருத்து வெளியிட்டிருந்தனர்.

எனினும் சிறு குற்றங்களுக்காக சிறைவாசம் அனுபவிப்பவர்கள், 70வயதுக்கு மேற்பட்ட சிறைக்கைதிகள், சிறிய குற்றங்களுக்கு தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறைவாசம் அனுபவிப்பவர்கள் ஆகியோருக்கே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி குறித்த பட்டியலில் ஞானசார தேரரின் பெயர் குறித்த பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.(அ)

9 comments

 1. நல்லது

 2. நல்லது

 3. Very good very good

 4. Ajuwath Ahamed Lebbe

  விடுதலை சிரிய தவரு செய்தவர்களுக்கு மட்டுமே இவரு வெளியே வராமல் இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும்

 5. அப்போதுதான் மதத்தால் வேறுபட்டாலும் தமிழ் மொழியால் உயர்ந்தர்களை அழிக்க திட்டம் போடலாம்

 6. Nee ullaye iruda
  Adu than inda naattukke nalladu

 7. Nalla mudivu

 8. Nalla mudivu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>