வெடி பொருட்கள் தொடர்பில் 20ம் திகதியின் பின்னர் தொடர் சோதனை


police

சட்டவிரோத வெடி பொருட்களை வைத்திருப்பவர்கள் தொடர்பில் எதிர்வரும் 20ம் திகதியின் பின்னர் தொடர்ச்சியாக சோதனை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருப்பவர்களுக்கு அவற்றை ஒப்படைப்பதற்காக பொலிஸாரினால் கடந்த 12ம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த காலப்பகுதியினை எதிர்வரும் 20ம் திகதி காலை 6மணி வரை நீடிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி குறித்த திகதியின் பின்னர் நாடு பூராகவும் தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் சட்டவிரோத வெடிபொருட்கள் வைத்திருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(அ)

One comment

  1. அப்ப சிங்கள வீடுகளில் சோதனை இல்லையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>