இராணுவத் தளபதியுடன் பேசியமை தொடர்பில் அமைச்சர் ரிஷாட் விளக்கம்


Minister-Rishad-Badurdeen

தான் ஒருபோதும் எவரையும் விடுவிக்குமாறு பொலிஸாரிடமோ இராணுவத்தளபதியிடமோ கோரிக்கை விடுக்கவில்லை என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நீர்கொழும்பு பிரசதேசத்தில் நல்லடக்க நிகழ்வுகளுக்காக தேவாலயங்களுக்கு பாதுகாப்பை பெற்றுத்தருமாறு மக்கள் கேட்டதாகவும் அதற்காகவே தான் இராணுவத்தளபதியுடன் பேசி பாதுகாப்புக்காக கோரிக்கை விடுத்ததாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தான் இராணுவத்தளபதியுடன் பேசிய விடயங்கள் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தேவையேற்படின் அது தொடர்பில் விசாரணை செய்ய முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து தெஹிவளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர் தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தம்மிடம் தொலைபேசியில் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் ஒருபோதும் அழுத்தங்கள் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>