தப்பிச் செல்ல முற்பட்ட 84 ரோஹிங்கியர்கள் கைது


bgt

பங்களாதேஷிலிருந்து, மலேசியாவுக்குப் படகு வழியாக தப்பிச் செல்லவிருந்த 84 ரோஹிங்கிய அகதிகளை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அதிகாரிகள் தங்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவல்களின் அடிப்படையில் அகதிகளைக் கண்டுபிடித்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கூட்டம் நிறைந்த பங்களாதேஷ் அகதி முகாம்களிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக் கணக்கானோர் தப்பிச் செல்வதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக மலேசியா, தாய்லந்து போன்ற நாடுகளில் அடைக்கலம் தேடி அவர்கள் அங்கு செல்வதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வாழ்க்கை மேம்படும் என்ற நம்பிக்கையில், வாழ்நாள் முழுவதும் சேமித்த பணத்தை இந்த அகதிகள் இத்தகைய படகுப் பயணங்களுக்குச் செலவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>