அமைச்சர் ரிஷாத் இன்று FCID யில் வாக்கு மூலம்


rishad-b-2

கடந்த 2014 -2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் லங்கா சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக  நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அங்கிருந்து வௌியேறிச் சென்றுள்ளார்.

சுமார் 05 மணி நேரம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

லங்கா சதொச நிறுவனத்தில் அரிசி கொள்வனவின் போது இடம்பெற்றுள்ள மோசடி சம்பந்தமாக வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை 10 மணியளவில் அமைச்சர் எப்.சி.ஐ.டி.யிற்கு வருகை தந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>