ஜப்பானில் கத்திக் குத்து – மூவர் பலி


Screen Shot 2019-05-28 at 12.18.12 PM

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும், 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கத்திக் குத்தில் உயிரிழந்தவர்களில் 12 வயதான பாடசாலை மாணவியொருவரும், 39 வயதான ஒருவரும் அடங்குகின்றனர். பஸ்ஸிற்காக காத்திருந்த மாணவர்கள் மீதே கத்திக் குத்து நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தக் கத்திக் குத்தை நடத்தியதாகக் கூறப்படும் 50 வயதுடைய நபரும் தன்னைத்தானே கத்தியால் குத்தி உயிரிழந்துள்ளார்.

மேலும், இந்தச் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. (ஸ)

Screen Shot 2019-05-28 at 12.18.12 PM Screen Shot 2019-05-28 at 12.18.20 PM Screen Shot 2019-05-28 at 12.18.45 PM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>