தேசிய அரசாங்கம் குறித்து மஹிந்த ராஜபக்ஸ கருத்து


mahindaaa

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்தீரமற்ற நிலைமையில் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க தேவையில்லையென முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் ஒன்றை முன்னெடுத்துச் செல்லுமாறு தனக்கு யாராவது பரிந்துரை செய்தால், அதனை தான் வன்மையாக எதிர்ப்பேன் எனவும், தேசிய அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கிய ஆதரவு தொடர்பில் தான் நன்றாக புரிந்து வைத்துள்ளேன் எனவும் அவர் இன்றைய தேசிய சகோதர வார இதழொன்றுக்கு கூறியுள்ளார்.

தற்பொழுது நாட்டுக்குத் தேவைப்படுவது தேசிய அரசாங்கம் அல்லவெனவும், பொதுத் தேர்தலே ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்கள் இன்று அனுபவிக்கும் துன்பத்தைப் போக்க புதிய அரசாங்கம் ஒன்று தேவை என்பது தெளிவாகத் தெரிகின்றது எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.  (மு)

4 comments

  1. யாரையா அப்படி சொன்னார்கள்?

  2. போடா வெண்ணை

  3. அடேஅப்பச்சி.நீஎல்லாசெய்துவிட்டு.இப்போது.தேசியஅரசாங்காம்தேவையா.முஸ்லீம்இல்லாத.அரசாங்கம்எதற்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>