உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – துபாயில் கைதுசெய்யப்பட்டவர்கள் இலங்கைக்கு


sri_lanka_police

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புபட்ட பயங்கரவாத குழுவின் நபரான முகஹத் மில்ஹான் உள்ளிட்ட அதன் முக்கிய அங்கத்தவர் 5 பேர் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளை கொண்ட குழுவினரால் இன்று அதிகாலை 4 மணிக்கு துபாயிலிருந்து அழைத்துவரப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>