Batticaloa Campus இன் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களை வழங்குமாறு அறிவிப்பு


z_p04-Batticaloa-01

மட்டக்களப்பு ‘Batticaloa Campus’ தனியார் பல்கலைக்கழகதிற்கு சொந்தமான வங்கிக் கணக்கு தொடர்பிலான அனைத்துத் தகவல்களையும் வழங்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையை கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு, இலங்கை வங்கியிடம் முன்வைத்துள்ளது.

குறித்த நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள நிதி தொடர்பிலான விசாரணைகளின் பொருட்டு தகவல்கள் கோரப்பட்டுள்ளன.

இதேவேளை ‘Batticaloa Campus’ நிறுவனத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சாட்சி வழங்கியமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>