வைத்தியர் ஷாபிக்கு எதிராக விசாரணை – பொலிஸ்


shafi shihabdeen

வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபிக்கு எதிராக, தாய்மார்கள் சிலர் முன்வைத்த முறைப்பாடுகளை, கொழும்பு காஷல் மகப்பேற்று வைத்தியசாலை மற்றும் சொய்ஷா மகப்பேற்று வைத்தியசாலைகளில் விசாரணைகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இது குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இன்று (19) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மேற்கொள்ளப்படவேண்டிய பரிசோதனைகள் தொடர்பிலான அனைத்து வசதிகளையும் வழங்குமாறு, சுகாதார அமைச்சின் செயலாளருக்கு, குருணாகல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார். (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>